வானம் செம்மை கொண்டதோர்
அந்திப் பொழுதில்
நீர் நிறைந்து வழியும்
வாவிக்கரையருகே
பாதி நனைந்ததொருபாறையில் நான்
காற்று மெல்ல அசைய
காலைத் தழுவி நிற்கும் அலைகள்
தூரத்தில் தெரிகிறது
தாமரையின் இலை
மீன்பார்த்து இல்லையென
தளராது, தண்ணீர் அருந்திக்
காத்திருக்கும் கொக்கு
நீரின் அடி தாண்டி
ஆழ வேர்விட்டுப் பரவிக்கிடந்த
அரசமரம் இடையிடையே
பழுத்த இலையுதிர்க்கும்
இலைவிழுந்த பின்புலத்தில்
நீர் வளையம் எனை நோக்கி
அசைவது பார்த்திருக்க,
நடுவழியில் மெல்ல மறையும்
இருந்தும்
மறுபடியும் இலை விழுதல்
எதிர்பார்த்துக் காத்திருப்பேன்
வீடிழந்து,தெருவந்த பின்பு
இனி செய்வதற்கு என்னவுண்டு....
ஆக்கம்: தனேஸ்
2 comments:
அருமையான கவிதை. சிந்தித்து எழுதுகிறீர்கள்... பாராட்டுக்கள்
அட, வாவ்.
இன்னும் நிறைய எழுதுங்கள்!
Post a Comment