ஆக்கம்: தனேஸ்
மன விரல்கள்
ஆகாயமளவு நீண்டு
நிலவு பற்றி அணைத்து
உன்னைத் தழுவுகிற
நினைவில் கிடக்கிறது
பிரபஞ்ச வெளியில்
அலைந்து திரிந்தாலும்
மறுபடியும்உன்னையே
வட்டமிடுகின்ற என்கண்களில்
கண்ணீராகவே இருப்பது
உன் விருப்பா?
என் மனத்தோட்டமெல்லாம்
உன் மெளனத் துளிகளையே
வீசிச் செல்கின்றாய்,
ஆனால் இங்கேதாகங்கள்
எல்லாம்படையெடடுக்கின்றனவே!
இல்லாத பாதைகளிலேயே
பயணம் புறப்பட்டு
ஏதோ
உன் தெருவுக்கு வந்துவிட்டேன்
இனியும் வழிமாறிச் சென்றால்
துவண்டு போகாதா உயிர்...
பெண்ணே,
உன் மெளனம் கலைத்து
மறுமொழி பேசு,
பிரகாரமெல்லாம்
உன் விக்கிரகங்களே கொண்டஎன்
இதயக்கோயில் புகுந்துவிடு
2 comments:
nallayirukku
நன்றி சந்திரவதனா!
Post a Comment