வாழ்வு அள்ளித் தந்த
வரங்களை யாசிக்காது
அவள் கண்களால் தருகின்ற
சாபங்களுக்காகவே
காத்துக் கிடந்த நாட்களில்
எங்கெல்லாமோ சுற்றி வந்து
என்னைக் கண்டவுடன்
மின்னலென(த்)
துடிப்புடன் திரும்பிக்கொள்ளும்
பதினாறே நிரம்பிய
அவள் பார்வைகள்
சொல்லிச் சென்றவையே
இன்றும்
நான் பூட்டிப்பாதுகாக்கும்
முதல் காதல் கவிதைகள்
No comments:
Post a Comment